2025 மே 03, சனிக்கிழமை

ஆமைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 02 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, காரைதீவு பிரதேசத்தில் 03 ஆமைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சம்மாந்தறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல், இன்று (02) உத்தரவிட்டா​ர்.

கடந்த டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி, சம்மாந்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்துக் கைதுசெய்யப்பட்டிருந்த குறித்த நபர், பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இவ் வழக்கு விசாரணை, சம்மாந்துறை நீதவான் நீதமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X