Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 11 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அனுமதியற்ற முறையில் வெட்டப்பட்ட அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரத்தின் வடிச்சல் பிரதேசத்தின் நீர் வெளியேற்றத்தால் களப்பு நீர் வற்றி ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
பனங்காடு தில்லையாற்று களப்பானது கடலுடன் இணையும் பகுதியை ஒரு சிலர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெட்டியதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வரட்சியான காலநிலை தொடரும் இக்காலகட்டத்தில் சில ஏக்கர் வயல் நிலத்தினை அறுவடை செய்வதன் பொருட்டு அவ்வயல் நிலங்களில் உள்ள வடிச்சல் நீரை வெளியேற்றுவதற்காகவே இவ்வாறு வெட்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
விவசாய ஆரம்ப கூட்டத்தில் இம்மாதம் 15ஆம் திகதியே பிற்பாடே அறுவடைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டபோதும். முன் கூட்டியே விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு சிலரின் வயல் நிலங்கள் அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு;ள்ளது. இவர்களை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ள இந்நடவடிக்கையினால் களப்பு நீரை நம்பி விவசாயத்தை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான நிலங்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது இவ்விடயம் தொடர்பில் தமது அனுமதி பெறப்படவி;ல்லையெனவும் உடனடியாக அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தாகவும் விவசாயிகள் கூறினர்.
மேலும் பிரதேச சபையின் உதவியுடன் வெட்டப்பட்ட பகுதியை பெக்கோ இயந்திரத்தின் மூலம் மூடுவதற்கான நடவடிக்கையும் இன்று பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மேற்கொண்டார்.
இது தொடர்பில் அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது தானும் இதற்கான அனுமதியை வழங்கவில்லை எனவும் அவ்வாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும்; அவர் கேட்டுக் கொண்டார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025