2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 10 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசை கண்டித்து சம்மாந்துறைப் பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு  பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.ரீ.ஜே) இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளது. உரிமை மீட்கும் இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் கலந்துகொண்டு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் சம்மாந்துறைப் பிரதேசத்தில் புதன்கிழமை (09) ஒட்டப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .