Freelancer / 2022 ஜூன் 11 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆற்று மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால், மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வறட்சியுடனான காலநிலை, எரிபொருட்களின் விலை, காரணமாக ஆற்று மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறால் கிலோ ஒன்றின் விலை 1,600 ரூபாவாகவும், கணவாய் கிலோ ஒன்றின் விலை 1,800 ரூபாவாகவும் காணப்படும் நிலையில், ஏனைய சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
ஆற்றை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026