2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இடமாற்ற விபரப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற விபரப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றப் பட்டியல் பிரதி பிரதம செயலாளர் நிர்வாக அலுவலயகத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள  சகல செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய இடமாற்றங்கள் அனைத்தும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி முதல் செயற்படுமெனவும் அவர் கூறினார்.

கோரப்பட்ட இடமாற்ற விண்ணப்பத்தின் பிரகாரம், இடமாற்ற சபையின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இடமாற்றப் பட்டியல் இதுவாகும்.

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழிநுட்ப உத்தியோகத்தர், மொழி பெயர்ப்பாளர் சேவை, சாரதிகள் சேவை, தொழில்நுட்ப உதவியாளர் சேவை, அலுவலக பணியாளர் சேவை என்பவற்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இடமாற்றக் கட்டளையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இடமாற்ற உத்தியோகத்தர்களுக்கு பொருத்தமான பதிலீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதி ஆளணி குறித்தும் கவனம்  செலுத்தப்பட்டுள்ளதோடு, 2017 - இடமாற்ற கட்டளையில் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தியோகத்தர்கள் தங்களது கடமை பொறுப்புகளை வழங்கப்பட்ட கால இடைவெளியில் அலுவலகத்திலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பகிர்ந்தளித்து பயிற்றுவிக்குமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இடமாற்ற உத்தியோகத்தர்களின் மேன்முறையீடுகள் எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. தாமதமாகக் கிடைக்கும் மேன் முறையீடுகள் நிராகரிக்கப்படுமெனவும் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X