Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூலை 10 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
'தமிழ், முஸ்லிம் சமூங்களின் தலைமைகள் இணைந்த செய்தியே தேசியத்துக்கு நாம் கொடுக்கும் பதிலடியாக அமையும்'; என கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் கடந்தகால தவறுகளை மறந்து ஒன்றிணையும் வகையில், இரு சமூகங்களின் தலைமைகளும் ஒரு மேசையில் அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் ஞாயிறு (9) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,'இரு சமூகங்களும் சேர்ந்து எமக்கு அநீதி செய்தவர்களை வாக்களித்து சேர்த்துவிட்டு, நாம் கைகட்டி பார்த்துக்கொண்டு இருக்கின்றோமா என்ற சந்தேகம் தற்போது தோன்றியுள்ளது.
'இந்த இரண்டு ஆட்சியாளர்களின் காலத்திலும் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏதாவது ஒரு அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தனித் தனியாக இருந்தவர்களை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைத்து தவறு செய்த அச்ச உணர்வு தற்போது எம் மத்தியில் இருக்கின்றது.
இவ்வாறே இந்த நல்லாட்சியிலும் பந்தை மாற்றிவிடுகின்ற சூழ்நிலைகள் காணப்படுகின்றன.
தமிழ், முஸ்லிம் தலைமைகள் நாடாளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் தமது பிரச்சினைகளை பேசிக் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தென்பகுதியி;ல் வாழுகின்ற பெரும்பான்மையின மக்களுடன் நாம் பேச தவறிவிட்டோம். இது தற்போது நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை நான் இப்போது உணர்கின்றேன்.
இந்த நாட்டில் இருக்கின்ற இனப் பிரச்சிiனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என நியாயமாக சிந்திக்கின்ற பெரும்பான்மையினத் தலைவர்களும் பெரும்பான்மையின மக்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எமது பக்க நியாயங்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை தமிழ், முஸ்லிம் தலைமைகள் முன்னெடுக்க ஆயத்தமாக வேண்டும்' என்றார்.
22 minute ago
31 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
49 minute ago