Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
மாணவர்களாகிய நீங்கள் இணையத்தளங்களில் முழு நேரத்தையும் செலவிட்டு காலத்தை வீணடிக்கவேண்டாமென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களிடம் வினயமாக கேட்டுக்கொண்டார்.
கம்பரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள வடிகான் அமைப்பு வேலைத்திட்டத்தை இன்று(18) ஆரம்பித்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்: நம் நாட்டில் இன்று அதிகளவான மாணவர்கள் முகநூல் உள்ளிட்ட இணையத்தளங்களில் முழு நேரத்தையும் செலவிட்டு காலத்தை வீணடிக்கின்றனர். இதனால் உங்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். ஆகவே நீங்கள் கல்வி கற்பதில் நூறு வீதமான அக்கறை காட்டி சிறந்த மாணவர்களாக உருவாவதன் மூலம் இந்த பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
பாடசாலையின் அதிபர் திருமதி சோமபாலவின் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நடும் நிகழ்விற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு சமய வழிபாடுகளை தொடர்ந்து, வடிகான் அமைப்பிற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தனர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஆர்.ஜெகநாதன் மற்றும் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago