2025 மே 05, திங்கட்கிழமை

இன்று இரவு முதல் மருதமுனை முடங்குகின்றது

Princiya Dixci   / 2021 ஜூலை 01 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறுக் ஷிஹான், நூருள் ஹுதா உமர், அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை மாவட்டத்தின்  மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு மருதமுனை பிரதேசத்தை, இன்று (01)  இரவு 10 மணி முதல் முழுமையாக முடக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில், மாநகர மேயர் அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தில், மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மருதமுனை பிரதேசத்துக்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மருதமுனை பிரதேசத்தில் இருந்து கொரோனாவை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X