Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பைஷல் இஸ்மாயில் / 2017 நவம்பர் 04 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஞானசாரவுடன் பேச வேண்டாம் என நாம் சொல்லவில்லை. அவரோடு பேசுவோமென, 2015ஆம் ஆண்டிலிருந்து மிகப் பகிரங்கமாக சொல்லிக்கொண்டிருப்பது உலமா கட்சி மட்டும்தான். ஆனால், இரகசியப் பேச்சுகள் வேண்டாம் என்றே கூறுகிறோம்” என, உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
கல்முனையிலுள்ள அவரது கட்சிக் காரியாலயத்தில் இன்று (04) காலை இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில்,
“பொது பலசேனா மஹிந்த காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தியபோது, அவர்களுடன் முஸ்லிம் சமூகம் பேச வேண்டும் என நாம் பல தடவைகள் சொன்னபோது கேட்காதவர்கள், இப்போது பேச்சுவார்த்தையில் ஈடுவட்டு வருகின்றார்கள். இது நல்ல விடயம்தான். இதனை உலமாக்கட்சி ஆதரக்கின்றது, வரவேற்கின்றது. ஆனால், அதனை ஏன் இரகசியமாகப் பேசப்பட வேண்டும் என்பதுதான் பலத்த கேள்வியாகும்.
“பேச்சுவார்த்தைகளின்போது, ஊடகங்களுக்காவது இடமளிக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு பேச்சுவார்த்தை முடிவிலும் முஸ்லிம் தரப்பும் ஞானசாரவும் இணைந்து பேசப்பட்ட விடயங்கள் பற்றி இரு தரப்பும் ஒன்றாக இணைந்து ஊடகங்களுக்கு அதைப்பற்றித் தெரிவிக்க வேண்டும்.
“இது அவ்வாறில்லாமல், இரகசியமாக நடத்தப்படுகின்ற இந்தப் பேச்சுவார்த்தையை முஸ்லிம் சமூகம் சந்தேகமாகப் பார்க்கின்றது.
“பகிரங்கமாக ஆரம்பித்த பேச்சுவார்த்தை திடீரென இரகசியமாக மாறி மக்களிடம் ஆலோசனை கேட்காமலேயே, திடீரென ஹலால் வாபஸ் பெறப்பட்டது. எனவேதான் கொழும்புத் தலைமைத்துவங்கள் சிலர் மேற்கொள்ளும் இப்படியான பேச்சுவார்த்தைகள் சந்தேகம் தருகின்றன. இறுதியில் திடீரென ஞானசாரவின் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன என்று செய்திகள் வரலாம்.
“எமக்கு பேச்சுவார்த்தை முக்கியமே தவிர, அது பற்றி பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என இவர்கள் கூறலாம். பேச்சுவார்த்தைகள் என்பன முழுக்க முழுக்க இரகசியமாக இருந்திருந்தால் அதனை ஓரளவு ஏற்கலாம். ஆனால், பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற விடயம் பகிரங்கமாகி விட்டிருந்தும் என்ன பேச்சுவார்த்தை, யார் யார் என்பதையெல்லாம் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தைத் தருகிறது.
“இந்த நாட்டின் வரலாற்றைப் பார்க்கும் போது, அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளாக இருந்தாலும் சரி, எத்தகைய பேச்சும் இரகசியமாக நடத்தப்பட்டதால், அது அவர்களுக்குத்தான் இலாபமாக முடிந்துள்ளதே தவிர, சமூகங்கள் நன்மை பெற்றதில்லை. இதனை பிரேமதாச ஆட்சிக்காலத்தில் இருந்து கண்டு வருகின்றோம்” என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago