2025 மே 03, சனிக்கிழமை

இராமகிருஷ்ண மாணவன் மூன்றாமிடம்

Niroshini   / 2017 ஜனவரி 07 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் தணிகாசலம் வினுராஜ், உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தியினை பெற்று மாவட்ட மட்டத்தில் 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் தணிகாசலம், குமுதா ஆகியோரின் புதல்வராவார்.

இதேவேளை, கணிதப் பிரிவில் தோற்றிய தம்பிப்பிள்ளை நாவேந்தன் 2 ஏ, 1 பி சித்தியினை பெற்று மாவட்ட மட்டத்தில் 16ஆவது இடத்தினையும் அசோகன் தனுஸ்பவன் ஏ, பி, சி சித்தியையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காத இரு மாணவிகள் தற்கொலைக்கு முயற்சித்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X