2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இராணுவ உடைகள், தோட்டாக்களை வைத்திருந்தவர் கைது

Princiya Dixci   / 2021 ஜூலை 11 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ்

வீடான்றின் காணியில் இராணுவ உடையை ஒத்த பொருள்களை பரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஒருவரை, சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை, சவளக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சொறிக்கல்முனை வீரச்சோலை  பகுதியை சேரந்த 64 வயதுடைய இந்தச் சந்தேகநபர், நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரு வேறு வகையிலான இராணுவ உடைகள் இடங்கிய பொருள்கள் உட்பட  2 தோட்டாக்களும் மேலும் சில பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பரல் மீட்கப்பட்ட  பகுதியில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன்,  சவளக்கடை பொலிஸார் சந்தேக நபரிடம்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .