2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்துக்கான ஆட்சேர்ப்புத் தொடர்கிறது

Princiya Dixci   / 2020 நவம்பர் 24 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், தீஷான் அஹமட்

இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிர்வாக உதவியாளர், கணினி வன்பொருள் உதவியாளர், வைத்திய உதவியாளர், தாதி மருந்தகர் உள்ளிட்ட 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில், நாளை (25) முதல் டிசெம்பர் 2ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை  நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்த நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்கின்ற இளைஞர், யுவதிகள் வெற்றிடமாகவுள்ள 77 பதவிகளில் விரும்புகின்ற  பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். 

இதற்கான தகுதிகளாக, விண்ணப்பதாரிகள் இலங்கைப் பிரஜைகளாக இருத்தல், திருமணமாகாதவர்களாக இருப்பதுடன், ஆண்கள் 18-26 வயதுக்குள்ளும், பெண்கள் 18-22 வயதுக்குள்ளும் இருத்தல்,  ஆண்கள் குறைந்தது 5'4' உயரமுடையவர்களாகவும், பெண்கள் குறைந்தது 5'2' உயரமுடையவர்களாகவும் இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவிகள் யாவும் ஓய்வூதிய உரித்துடையதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான சகல சலுகைகளும் வழங்கப்படும். மேலும்  குறைந்த பட்ச திரட்டிய சம்பளம் 50,000 ரூபாய் வழங்கப்படும்.

தகைமையுடையவர்கள் விண்ணப்ப படிவங்களையும், மேலதிக தகவல்களையும் உங்களது பிரதேச கிராம உத்தியோகத்தரிடம் அல்லது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின்  அனைத்துக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திட்டத்தின் கீழ், மூதூர் இளைஞர்களுக்கான  நேர்முகத் தேர்வு, மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று (24) நடைபெற்றது.

இதில் 20க்கும் அதிகமான இளைஞர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நேர்முகத் தேர்வு, நாளையும் (25)  நாளை மறுதினமும் (26) மூதூர் பிரதேச செயலகத்தில் தொடந்தும் நடைபெறவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X