2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இரும்புகளை திருடியவர் சிக்கினார்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் போது, கொங்கிரீட் வேலைகளுக்காகவும் ஏனைய இதர பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் இரும்பு முட்டுகளை திருடி அதற்கு பல வர்ணங்கள் பூசி விற்பனை செய்து வந்த நபரொருவர், கல்முனை பொலிஸாரால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். 

“நீண்ட காலமாக இப்பகுதிகளில் இவ்வாறு இரும்பு முட்டுக்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

 “எதிர்காலத்தில் பொதுமக்கள் இவ்வாறான கட்டட   அபிவிருத்திப் பணிகள் இடம்பெறும் போது விழிப்புடன் செயல்படுவது கட்டாயமானதாகும்.

“சாதாரணமாக இவ்வாறு திருடப்படும் இரும்பு முட்டுகள் 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன” என கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.  

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை தேடி கல்முனை பொலிஸார் வலை விரித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .