Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்றூப் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட நிகழ்வு இறக்காமத்திலுள்ள
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் எனும் நிகழ்வு, இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இணைந்துகொண்டனர்.
இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் நௌபர் மௌலவி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இறக்காமம் பிரதேச அபிவிருத்திகள், குறைபாடுகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் இறக்காமம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்காக மக்கள் பல தியாகங்களுக்கு மத்தியில் வாக்களித்திருந்தனர். வெற்றி பெற்ற இச்சபையினூடாக மக்களுக்கான எந்திவித சேவையும் அது வரையில் இடம்பெறவில்லை. இதனால் அக்கட்சிக்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதில் எந்தவித பயனும் இல்லை. எனவே எமது ஆதரவினை விலக்கி அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைவதாக தெரிவித்தனர்.
எதிர் வரும் 28 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் இறக்காமம் வருகை தரவுள்ளதால் அன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதேச சபை உறுப்பினர்களுடன் இன்னும் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பலப்படுத்தவுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த இறக்காமம் 08 ஆம் வட்டார முன்னாள் வேட்பாளரும் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் பொருளாளருமான தாஹா செயினுடீன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு செயலாளர் எம். அஸ்வர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்நூஹ்மான் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், பிரதித் தவிசாளரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற டி உறுப்பினருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில், அஷ்ஷெய்க் ஹனிபா மதனி மற்றும் சட்டத்தரணி பாறூக்சாஹிப் உள்ளிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் இறக்காமம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago