2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலவச கணினி பயிற்சிநெறி விண்ணப்பம் கோரல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடறாஜன் ஹரன்

தகவல் தொடர்பாடல் யுகத்துக்குள் இளைஞர்களைக் கொண்டு செல்லும்  நோக்கை இலக்காகக் கொண்ட கணினிப் பயிற்சிநெறி, அக்கரைப்பற்று மகாசக்தி சிக்கன கூட்டுறவு நிறுவனத்தால் இலவசமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவை மையப்படுத்தியதாக ஆரம்பிக்கப்படவுள்ள இக்கணினிப் பயிற்சிநெறித் திட்டத்தில், பிரதேசத்தில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள இளைஞர், யுவதிகள் இணைந்துகொள்ள முடியுமென மகாசக்தி நிறுவன செயலாளர் எஸ்.திலகராஜ் தெரிவித்தார்.

இந்தக் கணினிக் கல்விக் கூடத்துக்கொன ஐந்து கணினிகளை, கல்முனை கூட்டுறவு திணைக்களம் இலவசமாக வழங்கவுள்ளதாகவும் இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை, மகாசக்தி நிறுவனத்தில் பெற்று,  ஒப்படைக்கலாமெனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .