2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு, இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கே.தயானந்தன் தலைமையில் இன்று (23) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் பிரதித் தலைவரும் கல்முனை பெரியபள்ளிவாசல் பேஷ் இமாமும்மான எம்.சி.ஏ.சமட் மௌலவி பிரதம அதிதியாகவும் அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.எம்.இப்றாஹிம் கௌரவ அதிதியகவும் கலந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மேற்படி அமைப்பின் அங்கத்தவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X