Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 நவம்பர் 29 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இலுக்குச்சேனை பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஜ.எச் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
இலுக்குச்சேனை, களவெட்டியா, நீத்தை, வாங்காமம் ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் விவசாயிகள், இப்பாதையின் ஊடாக மழை காலங்களில் சிரமங்களுக்கு மத்தியில் போக்குவரத்து செய்து வருகின்றனர்.
விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் கிராமிய பாலம் நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் கீழ், இப் பாலம் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர் குழுவினர் பாலம் அமையவுள்ள இடத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
விரைவாக இப்பாலத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பாலம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் நன்மை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago