2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Thipaan   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா  சரவணன், எஸ்.கார்த்திகேசு

பொத்துவில், கோமாரி முருங்கந்தனை வயல் பிரதேசத்தில், வேளாண்மை காவலுக்குச் சென்ற 18 வயது இளைஞனொருவன், இன்று சனிக்கிழமை (26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்

கோமாரி 2ஆம் பிரிவைச் சேர்ந்த 18 வயதுடைய முத்துக்குமார் தனுஜன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கோமாரி முருங்கந்தனை வயல் பிரதேசத்துக்கு, வழமைபோல வேளாண்மை காவலுக்காக வெள்ளிக்கிழமை (25) இரவு,  குறித்த இளைஞன் சென்றுள்ளான்.

இந்த நிலையில், குறித்த வயல் பிரதேசத்தில் தலையில் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இது தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X