Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
செயலிழந்து காணப்படுகின்ற இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை அவசரமாக புனரமைப்பு செய்து, இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்குமாறு இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"சுமார் 60 வருடம் பழமையான இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் எங்கே என்ற கேள்வி முஸ்லிம் ஆசிரியர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது. இன்று நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம் ஆசிரியர்கள் பல்வேறு தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றங்கள், முஸ்லிம் ஆசிரியைகள் எதிர்நோக்கும் கலாசார ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்ட தொழில் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக எவ்வித கவனமும் செலுத்தாத நிலையில் இச்சங்கம் இருந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
இந்த சங்கம் புனரமைப்பு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதனால் இளம் ஆசிரியர்களின் தொழிற்சங்க உரிமைகளுக்கு கதவடைப்பு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் நியமனம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தைப் பற்றி எதுவுமே தெரியாதுள்ளது. இதன் காரணமாக தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள அவர்கள் ஏனைய ஆசிரியர் சங்கங்களை நாடிச் செல்கின்றனர். இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தை ஜனநாயக வழியில் மீளமைப்பு செய்ய முன்வருமாறு அந்த சங்கத்தின் பிரதானிகளை கேட்டுக் கொள்கின்றேன்" என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
7 hours ago