2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் அதிபர்களுக்கு இடமாற்றம்

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளில் கடமையாற்றி வந்த அதிபர்கள், பிரதி அதிபர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அட்டாளைச்சேனை கோட்ட கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி இவர்களுக்கான இடமாற்ற நியமனக் கடிதங்களை அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அலுவலகத்தில் இன்று (21) வழங்கி வைத்தார்.

இதற்கமைய,அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கும் கரடிக்குளம் றஹ்மானியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.இத்ரீஸ், அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்துக்கும் சம்புநகர் அல் மினா வித்தியாலய பதில் அதிபர் என்.ஏ.சகுர்தீன், ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்துக்கும் அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்ப பிரிவு உதவி அதிபர் எஸ்.எல்.தாஜூதீன், சம்புநகர் அல் மினா வித்தியாலயத்துக்கும் அதிபர்களாக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஒலுவில் அல் ஹம்றா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எல்.யாசீன், அட்டாளைச்சேனை இக்றஹ் வித்தியாலயத்துக்கு பிரதிஅதிபராக நியமனம் செய்யப்பட்டு இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்நியமனங்களைப்பெற்ற அதிபர்கள், பிரதி அதிபர் ஆகியோர் உடனடியாக தங்களின் கடமைகளை இன்றிலிருந்து பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X