Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 09 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் நுகர்வுக்கு பொருத்தமில்லாமலும், உணவுச் சுகாதாரம் பேணப்பாடாமலும், கழிவுகளை ஒழுங்கான முறையிலும் அகற்றப்படாமலும், வியாபார அனுமதிப் பத்திரம், வைத்திய சான்றிதழ் பெறப்படாமலும் காணப்பட்ட நான்கு உணவகங்கள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளாதாக, பொத்தவில் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மலீக், இன்று (09) தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச சுகாதார அதிகாரி டொக்டர் ஏ.எம். இஸ்ஸதீன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (09) உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நுகர்வுக்கு பொருத்தமில்லாமலும், உணவுச் சுகாதாரம் பேணப்பாடாமலும், கழிவுகளை ஒழுங்கான முறையிலும் அகற்றப்படாலும் காணப்பட்ட 03 உணவகங்களும், 01 நுகர்வுப் பொருட்கள் விற்பனை நிலையமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூடப்பட்டுள்ள உணவகங்கள், மேற்படி குறைபாடுகளை சீர்செய்தப் பின்னரே மீளத் திறப்பதற்கு அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
24 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
24 Sep 2025