2025 மே 07, புதன்கிழமை

உணவு ஒவ்வாமையால் 13 மாணவர்கள் வைத்தியசாலையில்

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர் 

கல்முனை கல்வி வலய  சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் உணவு ஒவ்வாமை காரணமாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

150 க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பாடசாலையில் கல்வி பயில்வதுடன் சகல மாணவர்களும் குறித்த பாடசாலை உணவகத்தில் தான்  நேற்று (10) உணவருந்தி இருந்ததாகவும் அதில் 13 மாணவர்கள் வயிற்றுவலிக்கு ஆளானதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ்  தெரிவித்தார். 

 உணவகத்தை தற்காலியமாக மூடிவிட்டு மாணவர்கள் சாப்பிட்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்து சென்றுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சில மாணவர்கள் வீட்டுக்குசென்றபோதும் மேலும் சில  மாணவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X