எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017/2018 பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்ட விவசாயிகளுக்கு யூரியா உரம் கமநல சேவை மத்திய நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக, பாலமுனை கமநல சேவை மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அஷ்ரப் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நெல் விதைத்து சுமார் 02 மாதங்கள் கடந்த போதிலும் யூரியா உரத்திற்கான பாரிய தட்டுப்பாடு நிலவிவந்தது. இதையடுத்து, அரசாங்கத்தால் கமநல சேவை மத்திய நிலையங்களினூடாக 02 ஏக்கருக்கு இரண்டு யூரியா உரப் பைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
விவசாயிகள் 02 ஆயிரத்தி 500 ரூபாய் வீதம் செலுத்தி உரத்தைப் பெற்றுக் கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உரமானியத்துக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்ககளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஹெக்டேயர் நெற்காணியில் பெரும் போகத்துக்கான வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 minute ago
17 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
24 minute ago