2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உரமானியம், நட்டஈடு வழங்குமாறு கோரிக்கை

Editorial   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அம்பாறை மாவட்டத்தில் நெற் பயிர்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு விரைவாக உரமானியம் வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் விடுதலை முன்னணியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும் விவசாய அமைப்பின் தலைவருமான எம்.ஐ.ஆபூசஹீட், விவசாய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மிகக் குறைந்தளவிலான விவசாயக் காணிகளிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய காணிகள் வரட்சி காரணமாக நெற் செய்கை மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டுள்ளது. தற்போது செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்செய்கைக்கு உரம் பாவிக்கும் காலம் கடந்த நிலையிலும் இதுவரை உரமானியம் வழங்கப்படவில்லை.

கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு 500 ரூபாய்க்கு உரம் வழங்குவதாகக் கூறிய உரமானியமோ அல்லது ஏனைய பயிர்களுக்கு வர்த்தக நிலையங்களில் ஊடாக 1,500 ரூபாய்கு வழங்குவதாகக் கூறிய உரமோ இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

எனவே, அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக உரமானியம் வழங்குவதுடன், விவசாயச் செய்கை மேற்கொள்ளாதுள்ள விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளரும், விவசாய அமைப்பின் தலைவருமான எம்.ஐ.அபூசஹீட் விவசாய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .