2025 மே 12, திங்கட்கிழமை

உள்ளூர் துப்பாக்கிகளுடன் ஐவர் கைதாகினர்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 7 உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கிகளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலைய விசேட தகவல் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீரவின் தலைமையிலான பொலிஸ் குழு, நேற்று (24) மாலை மேற்கொண்ட தேடுதலின் போது, மேற்படி துப்பாக்கிகள் ஏழும் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் – காஞ்சிரம்குடா, தாண்டியடி பகுதிகளில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 7 துப்பாக்கிகளும் அதற்கான சன்னங்கள், ரவைகள், ஈயம் மற்றும் வெடிமருந்துகள் என்பன இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இம்மாதம் 11ஆம் திகதி  முதல் 24ஆம் திகதி வரையான  இரு வாரத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுமார் 20 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X