2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் பேரவைக் கூட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஒக்டோபர் மாதக் கூட்டம், இறக்காமம் மௌலானா மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, பேரவையின் செயலாளர்  சிரேஷ்ட ஊடகவியலாளர்  எம்.ஸஹாப்தீன் தெரிவித்தார்.

பேரவையின் தலைவர்  சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசனம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாதாந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம். சஹாப்தீன், பொருளாளர்  எம்.ஐ.எம். அஷ்ஹர் உள்ளிட்ட நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, அங்கத்தவர்களின் எதிர்கால தொழிற்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், பேரவையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

இக்கூட்டத்துக்கு சகல அங்கத்தவர்களும் தவறாது சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X