2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஊடரங்கு தளர்விலும் இறுக்கமாக இருங்கள்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், நாளை (01) நீக்கப்படும் பட்சத்தில், சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பொதுமக்கள் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.  

நகரங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுச் சந்தைக்களுக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்படுகின்ற ஆலோசனைகளைப் பின்பற்றிச் செயற்படுமாறு கேட்டுள்ளார்.

வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சமூக இடைவெளியைப் பேணும் முகமாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

அவசியத் தேவையின்றி எவரும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாமெனவும், அநாவசியமான போக்குவரத்தில் ஈடுபட வேண்டாமெனவும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும், நோயாளர்கள், வயோதிபர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் வீதிகளில் நடமாட வேண்டாமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .