2025 மே 15, வியாழக்கிழமை

ஏப்.21 தாக்குதல்; அம்பாறையில் தீவிரம்

Editorial   / 2020 ஜூலை 12 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கடந்தாண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இவ்விசாரணை நடவடிக்கையின் போது, நேற்று (11) காலை முதல் மாலை வரையான காலப்பகுதியில் சாய்ந்தமருது  தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் குழுவினர் தங்கியிருந்த வீடுகள், தாக்குதல் மேற்கொண்டுக் கொல்லப்பட்ட இடங்கள் என்பவற்றுக்கு, அவ்வாணைக்குழு உறுப்பினர்கள் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு வருகைதந்த குழுவினர், அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை நிந்தவூர், இறுதியாக தற்கொலை தாக்குதல் இடம்பெற்றிருந்த சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீட்டையும் பார்வையிட்டு, ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேலும், தற்கொலைதாரியான ஸஹ்ரான் ஹாசிமின் குழு  தங்கிருந்த வாடகை  வீடுகள்,  வெடிபொருள்களை மறைத்து வைத்திருந்த, தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட பிரதேசங்களுக்கும் இக்குழு  சென்று பார்வையிட்டனர்.

மேற்படி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள்  வருகையை அடுத்து, அப்பகுதிகளில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .