2025 மே 05, திங்கட்கிழமை

ஐம்பது பேருக்கு நிரந்தர நியமனங்கள் கையளிப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2019 ஜனவரி 27 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் ஒப்பந்த நிலையிலும் பயிற்சியாளர்களாகவும் பணியாற்றி வந்த 50 ஊழியர்களுக்கு, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவால், நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேசத்தில், காயத்திரிபுரம் வீடமைப்புத் தொகுதிகளை, நேற்று (26)  மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போதே, மேற்படி 50 ஊழியர்களுக்கு நிரந்த நியமனக் கடிதங்களை, அமைச்சர் வழங்கி வைத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றிய 14 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உட்பட தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய 50 ஊழியர்களுக்கே, இந்நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X