2025 மே 01, வியாழக்கிழமை

ஐஸுடன் ஒருவர் கைது

Janu   / 2024 மே 20 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை  சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பெரிய நீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர் புறத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய  சந்தேக நபர் ஒருவர் தொடர்பில்  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் சனிக்கிழமை(18) இரவு பெரிய நீலாவணை  பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது குறித்த சந்தேக நபர் வசம் இருந்து 2 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

மேலும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

பாறுக் ஷிஹான் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .