Janu / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பழைய மின்சார சபை வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய நபர் ஒருவர் திங்கட்கிழமை(6) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 770 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள்யாவும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago