2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஒன்று கூடல்

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

தேசிய செய்திப் பத்திரிகை விநியோகம் செய்யும் முகாமையாளர்களின் 9ஆவது அண்டு நிறைவு ஒன்று கூடல் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை (13) கொழும்பு  இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சிறிமல் பீரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் வெகுஜன ஊடக, நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இதில் குலுக்கல் சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்படும் செய்தி முகவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X