2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஒலுவிலில் விபத்து;30 பேர் காயம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 06 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை உழவு இயந்திரப்பெட்டி ஒன்று குடைசாய்ந்ததில்30 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலயத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் முகாம் நடைபெற்று வருகின்றது. இம்முகாமில் கலந்துகொண்ட மேற்படி இளைஞர்கள் ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டனர்;. மேற்படி வித்தியாலயத்தில் இவர்கள் சிரமதானத்தை முடித்துவிட்டு, மீண்டும் அல்-ஜாயிஸா வித்தியாலயத்துக்கு உழவு இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளாகினர்;.

18 வயது முதல் 24 வயதுவரையான இளைஞர்களே காயமடைந்துள்ளனர். இவர்கள் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்த இளைஞர்கள் அக்கரைப்பற்று, அம்பாறை, கல்முனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில்; ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .