Editorial / 2017 ஜூலை 22 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, பைஷல் இஸ்மாயில்
ஒலுவில் துறைமுகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இன்று சனிக்கிழமை (22) ஒலுவில் துறைமுகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“ஒலுவில் துறைமுகம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது. இதனை அபிவிருத்தி செய்து நாட்டுக்கு வருமானம் ஈட்டக் கூடியதாக மாற்றியமைப்பதற்கு இந்நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
“மர்ஹும் அஷ்ரபினால் இப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஏற்படுத்தப்பட்ட இத்துறைமுகம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது.
“இத்துறைமுக பராமரிப்புக்காக மாதமொன்றுக்கு 46 மில்லியன் ரூபாய் செலவாகின்றது. துறைமுக நுழைவாயில் மூடப்பட்டுள்ள மண்ணை அகழ்வதற்கு 5 ஆயிரம் மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது. எவை எப்படி இருந்தாலும் இத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதே எமது இலக்காகும்.
“மீனவர்களின் பிரச்சினைகளை தீர்வு காண்பதற்காக மீன் பிடித் துறைமுகத்தை மீன்பிடி அமைச்சிக்கு கையளிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.
“இத் துறைமுகத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள நஷ்டஈடுகளை 2 மாத காலத்துக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
“இப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு எமக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
“இத் துறைமுகத்தால் ஏற்பட்டுள்ள கடலரிப்பு மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் துறைமுக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்க உடனடி தீர்வு கிடைக்கும்” என்றார்.

9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026