Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
ஏட்டிக்கு போட்டியாக விதண்டம் செய்து கொண்டு நேரத்தை வீணடிப்பது கவலையளிக்கிறதென தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர் ஏ.நெய்னா மொஹம்மத், ஒர் இனம் இன்னுமோர் இனத்தை புறந்தள்ளிவிட்டு எதனையும் சாதிக்க முடியாதென அவர் தனது கன்னி உரையில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை மாநகர சபையின் 16வது மாதாந்த அமர்வு (30) பிற்பகல்வேளை, சபை முதல்வர் ஏ.எம். ரகீப் தலைமையில் நடைபெற்றபோது புதிய உறுப்பினர் நெய்னா மொஹம்மத் உரையாற்றுகையில்,
கல்முனை மாநகர சபை என்பது தமிழ்-முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாழுகின்ற ஒரு நகரமாகும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்போடு செயற்பட வேண்டும். மாநகர சபை என்பது பொது மக்களுக்கு சேவைசெய்கின்ற ஒரு இடமாகும். பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற வீதி அபிவிருத்தி, பொதுச் சுகாதாரம், மின்சார வசதிகள், முன்பள்ளி அபிவிருத்தி என்று ஆரம்ப மட்ட அபிவிருத்திக்கு வசதிகளை செய்து கொடுப்பது மாநகர சபையின் வேலைத்திட்டங்களாக இருக்கின்றதென கூறிய அவர் ,இந்த சபைக்கு வந்தவுடன் தான் விளங்குகிறது. இங்கு எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுகிறது என்றவிடயம் எனவும் தெரித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் வை.கே. ரஹ்மானின் இடத்திற்கு அலியார் நெய்னா மொஹம்மதும், தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினராக இருந்த சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸின் இடத்திக்கு மொகம்மட் மன்சூர் சப்ராஸ் மன்சூரும் தமது உறுதி மொழியை வழங்கி கன்னி அமர்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
33 minute ago
41 minute ago
1 hours ago