2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காசோலை மோசடியில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 24 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

காசோலை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (23) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனை முகவர் ஒருவரிடமிருந்து நான்கு இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மின் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கடந்த ஜனவரி மாதம் கொள்வனவு செய்த இந்தச் சந்தேக நபர், அப்பணத்துக்குப் பதிலாக கணக்கு மூடிய காசோலைகளை வழங்கியுள்ளார்.

இந்தக் காசோலைகளைப் பெற்றுக்கொண்ட முகவர் அக்காசோலைகளை மாற்றுவதற்காக குறித்த வங்கிகளுக்குச் சென்றபோது, அங்கு இக்காசோலைகள் செல்லுபடி அற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி அக்கரைப்பற்று பொலிஸில் குறித்த விற்பனை முகவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த தாம் 35 வயதுடைய இச்சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X