2025 மே 03, சனிக்கிழமை

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 08 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் கேரளக் கஞ்சாவைத்  தம்வசம் வைத்திருந்த 23 வயதுடைய இருவரை, சனிக்கிழமை (07) கைதுசெய்ததாக, அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்திய சோதனையின் போது, தனது உடமையில் கேரள கஞ்சாவை மறைத்து வைத்திருந்த மேற்படி இருவரை, அக்கரைப்பற்றுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாத்தறையை சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து 5.5 கிராமும், மற்றவர் அட்டாளைச்சேனை 6ஆம் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து 3.5 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (09) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X