Gavitha / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த அடை மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.
இந்தக் காலநிலையானது இரவு வேளைகளில் 24 °c வெப்ப நிலையிலும், பகல் வேளைகளில் 27 °c வெப்ப நிலையிலும் காணப்படுகிறது. தற்போது மலையகப் பிரதேசங்களின் காலநிலையை ஒத்ததான காலநிலை இப்பகுதியில் நிலவி வருகின்றது.
இது தவிர இரவு வேளைகளில் அதிக குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதனால் இந்தப் பகுதியிலுள்ள சிறுவர்களும், முதியோர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேலும், இந்தப் பகுதியில் இவ்வாறான தொடர்ச்சியான காலநிலை நிலவி வருமானால் பெரும்போக நெற்பயிர்ச்செய்கையில் பனி மூட்டங்களின் நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் வேளாண்மைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுமென விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், குளிர் காய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago