2025 மே 05, திங்கட்கிழமை

கசிப்பு தயாரிப்பு; ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 ஜூன் 08 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

காரைதீவில் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சிய ஒருவர், பொலிஸார் இன்று (08) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காரைதீவு பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான கே.கே. அமரானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலையே, இந்தக் கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பில் காரைதீவு எட்டாம் பிரிவை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கசிப்புக் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய பொருட்களும் 40 கசிப்புப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X