2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் முச்சக்கரவண்டிச் சாரதி கைது

Suganthini Ratnam   / 2016 மே 30 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரை அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நள்ளிரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொத்துவில் பிரதேசத்திலிருந்து நிந்தவூர் பிரதேசம் நோக்கி திருக்கோவில் பிரதான வீதி ஊடாக மூன்று பேருடன்; பயணித்த முச்சக்கரவண்டியை வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்துச் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது,  மறைத்து வைத்திருந்த நிலையில் சாரதியிடம் 15 மில்லிக்கிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அக்கஞ்சாவையும் முச்சக்கவண்டியையும் கைப்பற்றியுள்ளதுடன், சாரதியையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பேரும் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திச் சென்றமை தெரியவந்துள்ளதுடன், விசாரணையின் பின்னர் அவர்களை விடுவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X