2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கடந்த 10 மாதங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த 10 மாதங்களில் 13 பேர் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செலுத்தி வீதி விபத்தில் மரணமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமில் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை ஞாயிற்றுக்கிழமை (30) ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வரும் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்தி என்பவற்றை மையமாகக் கொண்டு செயற்படுகின்றது.

இவ்வாறான நடமாடும் சேகைள் மூலம் மக்கள் விரைவாகவும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமிலிருந்த பிரச்சினைகள் இலகுவாக அவ்விடத்திலேயே தீர்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நன்கு பயன்படுத்த வேண்டும்.

இந் நடமாடும் சேவையுடன் இணைந்ததாக ஒலுவில் பிரதேசத்தில் ஒரு மாத காலத்துக்கு நடமாடும் பொலிஸ் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் உங்களது பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸாருக்கு பொது மக்கள் பூரண ஒத்தழைப்பை வழங்க வேண்டும். அவர்களை மாற்றந்தான் மனப்பான்மையுடன் பார்க்க வேண்டாம்.

சட்டத்தை பொலிஸார், அதிகாரிகளால் மட்டும் கொண்டு செல்ல முடியாது. அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

ஒரு பிரதேசம் அபிவிருத்தியடைய வேண்டுமானால், அங்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். எமது பிரதேசத்தை பொறுத்த வரை மக்கள் சட்டத்தை மதிக்கும் தன்மை குறைவடைந்துள்ளது.

சட்டம் மக்களை பாதுக்காப்பதற்காகவே, வாகனச் சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களுக்கு போக்குவரத்து சட்டத் திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகமாக ஏற்படுகின்றது. மோட்டார் சைக்கிள் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து சகல ஆவணங்களுடனும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .