2025 ஜூலை 05, சனிக்கிழமை

கடலரிப்பால் மய்யவாடிக்கு பாதிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீகே.றஹ்மத்துல்லா, நூருல் ஹுதா உமர்

அம்பாறை, மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மய்யவாடியின் பின்புற மதில், கடலரிப்பால் பாதிப்படைந்து உடைந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் உள்ளதால், அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் தோண்டப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அந் நூர் ஜும்மாப்பள்ளிவாசலின் தலையீட்டினால் அதற்கான தற்காலிய தீர்வொன்றை பெறும் நோக்கில், மண்மூட்டைகள் அடுக்கி, மதில் உடைந்து விழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டமொன்று, நேற்று (23) மாலை மேற்படிப் பிரதேசத்தில் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலகக் கரையோரம் பேணலுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் மப்ரூரின் கண்காணிப்பிலும், ஆலோசனையிலும் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தை, பிரதேச சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள், பொதுமக்கள் முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .