2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கடல் நீர் உட்புகுந்ததால் உளுந்து, நிலக் கடலை பாதிப்பு

Princiya Dixci   / 2022 மே 12 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

கல்முனையில் தீடிரென ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் உட்புகுந்ததால் கல்முனை விவசாய விரிவாகல் பிரிவில் பயிரிடப்பட்ட உளுந்து மற்றும் நிலக்கடலை என்பன பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கல்முனை அன்பு சகோதர இல்லத்தில் சுமார் அரை ஏக்கரில் பயிரிடப்பட்ட  நிலக்கடலை,  சுமார் ஒன்றரை ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து செய்கைக்குள்ளும் கடல் நீர் உட் புகுந்த நிலையில் செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன..

இந்தப் பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அம்பாறை  மாவட்ட மறு பயிர் செய்கை விவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார், கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரதம போதனாசிரியர் எஸ்.கிருத்திகா, கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய போதனாசிரியர் என்.யோகலக்ஷ்மி ஆகியோர் இன்று (12) கள விஜயம் செய்து, விவசாயிகளுக்கு தேவையான வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

உளுந்து, நிலக்கடலை என்பன சுமார் 35 நாட்கள் பயிரிடப்பட்ட நிலையில், மேலும் சுமார் ஒன்றரை மாதத்துக்குள் அறுவடை செய்யப்படவிருந்த நிலையில் இவ் கடற்கொந்தளிப்பு காரணமாக பயிரிடப்பட்ட பகுதிகளுக்கு கடல் நீர் உட்புகுந்ததாக விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .