Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 நவம்பர் 06 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் மீன்பிடித் துறைமுக நுழைவாயிலில் கரையொதுங்கியுள்ள கடல் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரதான கடற்றொழில் இறங்கு துறையாக ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் காணப்படுகிறது.
அம்பாறை மாவட்டம் மட்டுமல்லாது மட்டக்களப்பு, காலி, மாத்தறை, ஹம்மாந்தோட்டை களுத்துறை, புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும் தமது தொழில் நடவடிக்கையை இங்கு மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயில் கடந்த சில மாதங்களாக கடல் மணலால் மூடப்பட்டு காணப்படுவதால், மீனவர் சமூகம் பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளனர் என்பதுடன், கடற்றொழில் நடவடிக்கைகளும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதோடு, மீனவர் சமூகத்தினர் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, துறைமுக நுழைவாயில் நிரம்பி காணப்படும் மணலை அகற்றுமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த கோரிக்கைக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago