2025 ஜூன் 28, சனிக்கிழமை

கட்டட நிர்மாணத்துக்கான ஆகக்குறைந்த நிலம் வரையறை

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில், வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஆகக்குறைந்த நிலத்தின் அளவு 03 பேர்ச் என்று வரையறை செய்யப்பட்டு, கல்முனை மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக நிலையம் ஒன்றை அமைப்பதற்கு 0.5 (அரை) பேர்ச் நிலம் போதுமானது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதார்ந்த அமர்வு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விடயம் நகர அபிவிருத்தி அதிகார சபையிடமும் பரிந்துரைக்கப்படவுள்ளது.

தற்போது வீடு அல்லது வர்த்தக நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஆகக்குறைந்த நிலத்தின் அளவு, 06 பேர்ச்சாக இருக்க வேண்டும் எனும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் விதிமுறை காரணமாக, கல்முனையில் நிலத்தட்டுப்பாடு நிலவுவதுடன், பொதுமக்களும் வர்த்தகர்களும் தமது வீடுகள், கடைகள், கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு, மாநகர சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில் கிழக்கு மாகாண காணித் திணைக்களத்தின் வேண்டுகோளின் பிரகாரம், கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வின்போது, கட்டட நிர்மாணத்துக்கன நிலத்தின் அளவைக் குறைக்கும் பிரேரணை, முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .