2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை நகரில் கைப்பற்றப்பட்ட 14 கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,500 ரூபாய் அபராதம் கல்முனை மாநகர சபையால் விதிக்கப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அஹ்சன் தெரிவித்தார்.  

மாடுகள், உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மாடுகளை, அவற்றின் உரிமையாளர்கள் தமது சொந்த இடங்களில் வைத்துப் பராமரிக்க வேண்டும் எனவும் அதனை மீறி அவை மீண்டும் பொது இடங்களில் நடமாடினால், அபராத்துக்கு மேலதிகமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .