Princiya Dixci / 2022 ஜூலை 03 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார், சகா
வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவுக்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை, இம்மாதம் ஜுலை 22ஆம் திகதி முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை திறக்கப்படவுள்ளது.
இது தொடர்பான தீர்மானம், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையிலான மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி உகந்தை முருகன் கோவிலில் காலை 6 மணிக்கு இடம்பெறும் பூசை வழிபாடுகளை தொடர்ந்து, காலை 7 மணிக்கு உத்தியோகபூர்வமாக காட்டுவழிப்பாதை யாத்திரிகர்களுக்காக திறந்துவிடப்பட இருக்கின்றது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும் பாதை தொடர்ந்து வரும் 14 நாட்கள் அதாவது ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 3 மணிக்கு மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் முருகன் கோவிலின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இம்மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
அதேவேளை, உகந்தை மலை முருகன் கோவிலின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இம்மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது.
மேற்படிகூட்டத்தில் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், மொனராகல மாவட்டச் செயலக பிரதிநிதி, கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள், பாணமை விகாராதிபதி வண.சந்திரரத்ன ஹிமி, கோவில் தலைவர் சுதுநிலமே திசாநாயக உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேலதி அரசாங்க அதிபர் ஜெகதீசன், தற்போது எரிபொருள் மற்றும் வளப் பற்றாக்குறைகள் இருக்கின்றபோதும் யாத்திரிகர்களின் தேவைகளை பூர்த்திசெய்கின்ற வகையில் திணைக்களங்கள் அர்ப்பணிப்பான சேவையை வழங்க முன்வந்திருப்பதாகவும் யாத்திரிகர்கள் குடிநீர் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்தி, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
3 minute ago
15 minute ago
20 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
20 minute ago
28 minute ago