2025 மே 05, திங்கட்கிழமை

கனரக வாகனங்கள் செல்லத் தடை

Freelancer   / 2021 ஜூலை 11 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் செங்காமம் அல் மினா வீதி மற்றும் மையவாடி வீதியில் கன ரக வாகனங்கள் பயணிக்கத் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். மர்சூக் தெரிவித்தார்.

செங்காமம் வயல் பிரதேசத்திலுள்ள கொடைவெளி ஆற்றிலிருந்து கனரக வாகனங்கள் மூலமாக மணல் ஏற்றிச் செல்வதால், குறித்த வீதிகள் பாதிப்படைவதாக கடந்த மாத பொத்துவில் பிரதேச சபை அமர்வில் பிரேரனை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வீதிகளூடாக கனரக வாகனங்கள் பயணிக்க தடை செய்யப்பட்டுள்ள சமிஞ்சை பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இவ் வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியிருந்ததையடுத்து. இதனை ஆராயும் பொருட்டு பிரதேச சபைத் தவிசாளரினால் தனது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமையப்பெற்ற குழுவின் அறிக்கையின் படி சேதமடைந்த வீதிகளுக்கான நட்டஈடுகளை சம்மந்தப்பட்ட கனரக வாகன உரிமையாளர்களிடமிருந்து அறவிடுவது தொடர்பாக எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதேச சபை மாதாந்த அமர்வில் ஆராயப்படவுள்ளதாகவும் கூறினார்.

பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் போன்றோர் போக்குவரத்துச் செய்ய முடியாமல் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளாதாக அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X