Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
பல்துறை ஆளுமை கொண்ட பெண் படைப்பாளி, ஓய்வு நிலை ஆசிரியை எம்.ஐ.எப்.மதீனா உம்மா எழுதிய 'கனவு மகன்' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(21) நடைபெறவுள்ள இவ்விழா பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் கியாஸ் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின்போது, பிரதேச செயலாளர் அஷ்-ஷேய்ஹ் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா இந்நூல் மீதான நயவுரையினை நிகழ்த்தவுள்ளார். இதேவேளை, அக்கரைப்பற்று கல்வி வலய தமிழ்த் துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனீபா இஸ்மாயில் இந்நூல் அறிமுக உரையினை நிகழ்த்தவுள்ளார். இந்நூலாசிரியர் இதுவரை ஒன்பது நூல்களை எழுதியுள்ளார். கவிதை, இஸ்லாமிய வழிகாட்டும் அம்சங்கள். சிறுகதை, பொது அறிவு, அரபு எழுத்தணி, நிருவாக அறிவுத் துணுக்கு, பாடசாலை மாணவர்களுக்கான தமிழ்மொழி வினா விடை, தமிழ், சிங்கள அகராதி என பல்வேறு நூல்களை எழுதிய பிரபல பெண் எழுத்தாளராவார்.
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago