2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கரும்புச் செய்கையாளர்களுக்கு நிரந்தர தீர்வு

Editorial   / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதாக சிறு கைத்தொழில் கரும்புத் துறை அமைச்சர் ஜனக பண்டார ஜனக வக்கும்புர வாக்குறுதியதிளித்துள்ளதாக, நுரைச்சோலை விவசாய அமைப்பின் தலைவர் ஏ.எல். மஹ்றூப், இன்று (20) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கை விவசாயிகளுக்கு கல்லோயா தனியார் கம்பனியால் நீண்ட காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி, அம்பாறை கரும்புச் செய்கை அமைப்பின் தலைவர் காமினி மற்றும் 05 வலயங்களின் உறுப்பினர்களும் அமைச்சர் ஜனக வக்கும்புரவை அமைச்சில் சந்தித்து நடத்திய கலந்துரையாடலின் போது, இதற்கான தீர்வை விரைவாகப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகளால் வழங்கப்படுகின்ற ஒவ்வொரு டொன்களுக்கும் 6,250 ரூபாயை ஜனவரி 01ஆம் திகதியில் இருந்து வழங்கப்படுமெனவும், பெல்வத்தை, செவனக்கல கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் முளை கரும்புகளுக்கு 50 சதவீதம் இலவசமாக வழங்குவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.

ஒவ்வொரு கரும்பு விவசாயிகளுக்கும் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகின்ற கரும்பு தொகைக்கேற்ப உபகாரத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் வழங்கிய உத்தரவாதத்தை கல்லோயா தனியார் கம்பனி நிறைவேற்ற தவறினால் இம்முறை செய்யப்பட்டுள்ள கரும்பை அறுவடை செய்வதில்லையெனவும், விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும் வரை கரும்புத் தொழிற்சாலைக்கு கரும்பு வழங்கவதுமில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X